இந்திய விளையாட்டு ஆணையத்தில் 959 பயிற்சியாளர்கள் உள்ளனர் - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்


இந்திய விளையாட்டு ஆணையத்தில் 959 பயிற்சியாளர்கள் உள்ளனர் - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
x

இந்திய விளையாட்டு ஆணையத்தில் 959 பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் வெவ்வேறு விளையாட்டு பிரிவுகளில் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பயிற்சி மற்றும் போட்டி ஒதுக்கீடுகளுக்கான ஆண்டில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை பணியில் அமர்த்த தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தில் தற்போது 959 பயிற்சியாளர்கள் உள்ளனர்.

இந்திய பயிற்சியாளர்களுக்கு 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு அவர்களது சந்தை மதிப்பு, தகுதி, அனுபவம் கடைசியாக பெற்ற ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் அளிக்கப்படுகிறது.

இந்த தகவல்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

1 More update

Next Story