குடிபோதையில் 9 மாத பெண் குழந்தை கொலை; தந்தை கைது


குடிபோதையில் 9 மாத பெண் குழந்தை கொலை; தந்தை கைது
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

யாதகிரியில் குடிபோதையில் 9 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

யாதகிரி:

யாதகிரி டவுன் சைதாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், தனுஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ராமுவின் மனைவி வெளியே சென்று இருந்தார். அப்போது குழந்தை தனுஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டு இருந்தது. அப்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராமு, தனுஸ்ரீயின் கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது.

இதுபற்றி அறிந்ததும் சைதாபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமுவையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் குழந்தையை, ராமு கொன்றது தெரியவந்தது. இருப்பினும் கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story