அரியானாவில் பள்ளி முதல்வர் அடித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை
பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
சண்டிகார்,
அரியானா மாநிலம் ஆதம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவன், கடந்த 10-ந்தேதி ஹிசார் மாவட்டத்தில் ஒரு பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக, தற்போது அவனுடைய பெற்றோர், போலீசில் புகார் செய்துள்ளனர்.
அதில், கடந்த சில நாட்களாக பள்ளி முதல்வர், தங்கள் மகனை படிப்பதற்கு லாயக்கில்லை என்று கூறி திட்டியும், அடித்தும் வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அதை தாங்க முடியாமல், அவன் தற்கொலை செய்து கொண்டதாகவும், சக மாணவர்கள் மூலம் இதை அறிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story