ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் 15 கிலோ கஞ்சா சிக்கியது


ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பையில்  15 கிலோ கஞ்சா சிக்கியது
x

ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் 15 கிலோ கஞ்சா சிக்கியது.

பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் ஒருவர் கஞ்சா கடத்திச் செல்வதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சிட்டி ரெயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிட்டி ரெயில் நிலையத்திற்கு கவுகாத்தியில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த ரெயிலில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் 3 பொட்டலங்களில் தலா 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 15 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story