தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்


தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம் அடைந்தார்.

உப்பள்ளி:

உப்பள்ளி டவுன் பங்காப்பூர் சவுக் பகுதியை சேர்ந்தவன் பவன் தொட்டமணி (வயது 12). இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பவன், டியூசன் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று பவன் மீது பாய்ந்து தாக்கியது. இதில், கழுத்து, தலை, இரண்டு கைகளில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், தெருநாயை விரட்டியடித்து பவனை மீட்டனர். பின்னர் அவனை உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story