சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு


சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு
x

சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது டெல்லியில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.புதுடெல்லி,காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தனி செயலாளராக இருந்து வருபவர் பி.பி. மாதவன் (வயது 71). இவர் மீது பெண் ஒருவர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் அவரது கணவர் மறைவுக்கு பின், வேலை தேடி அலைந்தபோது, மாதவனை தொடர்பு கொண்டுள்ளார்.

அவர் அந்த பெண்ணை முதலில் நேர்காணலுக்கு அழைத்துள்ளார். வீடியோ அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் சேட்டிங் வழியேயும் பேசியுள்ளார்.

இந்நிலையில், உத்தம் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தனித்த பகுதிக்கு பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளார். சம்பவத்தின்படி, நடப்பு ஆண்டு பிப்ரவரியில், சுந்தர் நகரில் உள்ள குடியிருப்புக்கு அழைத்து சென்று, அந்த பெண்ணின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த பெண்ணின் கணவர் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி பேனர்களை வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மாதவனை தொடர்பு கொள்ள முடியாத சூழலில், அவரது தனி உதவியாளர் கூறும்போது, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் திட்டமிடப்பட்ட சதி என்றும் தெரிவித்து உள்ளார்.


Next Story