சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர்
சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாகல்கோட்டை: பாகல்கோட்டை மாவட்டம் ரபகவிபனஹட்டி தாலுகா மகாலிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் கவிதா பதண்ணவர். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கவிதா தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதாக முதோல் தாலுகா சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் கவிதாவின் வீட்டிற்கு சென்று சுகாதாரத்துறை அதிகாரி சோதனை நடத்தினார். அப்போது கவிதா தனது வீட்டில் பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. அதாவது கள்ளக்காதல் விவகாரத்தில் கர்ப்பமாகும் பெண்கள், திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகும் பெண்களிடம் ரூ.20 ஆயிரம் வாங்கி கொண்டு கவிதா தனது வீட்டில் வைத்தே கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதனால் கவிதாவின் வீட்டிற்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர். மேலும் கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.