கன்றுகுட்டியை அடித்து கொன்ற சிறுத்தை


கன்றுகுட்டியை அடித்து கொன்ற சிறுத்தை
x

கன்றுகுட்டியை சிறுத்தை அடித்து கொன்றது.

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பஞ்சேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே கன்று குட்டி ஒன்றை தனியாக கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் கன்று குட்டி, வீட்டில் வளர்த்து வந்த நாய் கூச்சலிட்டது.

இதைக்கேட்ட பசவராஜ் மற்றும் குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்தபோது கன்று குட்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்தது. மேலும் அருகே சிறுத்தையின் கால் தடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். அதில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வந்து கன்று குட்டியை கடித்து குதறிகொன்றுவிட்டு சென்றது தெரியவந்தது. இதைப்பார்த்து நாய் குரைத்ததும், சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது. இதனால் பீதியான கிராம மக்கள், கன்று குட்டியை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


Next Story