முஸ்லிமாக மாறிய அர்ச்சகர் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பினார்
முஸ்லிமாக மாறிய அர்ச்சகர் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பினார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஹீரேஹள்ளி கிராமத்தில் ஓம்காரேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்திரசேகரய்யா என்பவர் அர்ச்சகராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினார். மேலும் இவர் தனது பெயரை முபாரக் பாஷா என்று மாற்றிக் கொண்டார்.
மேலும் இவர் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் வீடு கட்டி அங்கே குடிபெயர்ந்திட முடிவு செய்தார். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு துணையாக துமகூரு புறநகர் பகுதியில் வசித்து வரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த தன்வீர் என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் அர்ச்சகர் சந்திரசேகரய்யா முஸ்லிம் மதத்திற்கு மாறியது குறித்து அறிந்த பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி சோகுடா சிவண்ணா, சந்திரசேகரய்யாவின் வீட்டுக்கு நேரடியாக சென்றார். மேலும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கே வந்து விடும்படி கூறினார். அவர் கேட்டுக் கொண்டதை அடுத்து அர்ச்சகர் சந்திரசேகரய்யா மீண்டும் இந்த மதத்திற்கே வந்துவிட்டார்.