காட்டுயானைகள் நடமாடும் இடங்களை தெரிந்து கொள்ள ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டும் பணி


காட்டுயானைகள் நடமாடும் இடங்களை தெரிந்து கொள்ள ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டும் பணி
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் காட்டுயானைகள் நடமாடும் இடங்களை தெரிந்து கொள்ள ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை குமாரசாமி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

சிக்கமகளூரு:-

காட்டு யானைகள் நடமாட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா குந்தூர் கிராமத்தில் காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் 2 கூலி தொழிலாளிகளை காட்டுயானைகள் தாக்கி கொன்றுள்ளது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தரிகெரேவில் ஈரண்ணா என்ற விவசாயியை காட்டுயானை மிதித்து கொன்றது. நேற்று கூலி தொழிலாளிகள் மீது காட்டுயானை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கிராமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டும் பணி

மேலும் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டுயானைகளை பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி காட்டுயானைகள் நடமாடும் இடங்களை தெரிந்து கொள்ள ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கியது. இந்த ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நேற்று முன்தினம் மாலை மூடிகெரேவை அடுத்த கைமரம் பகுதியில் நடந்தது. இதில் குமாரசாமி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணியை தொடங்கிவைத்தார்.

பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்

அப்போது குமாரசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

எங்கெங்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறதோ, அந்த பகுதியில் ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்த ரேடியம் ஸ்டிக்கர் இருக்கும் இடங்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பகல் நேரங்களில் சாதாரணமாக தெரியும். இரவு நேரங்களில், வாகன விளக்கு வெளிச்சத்தில் பிரதிபலிக்கும். இந்த ரேடியோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் பதாகையில், யானைகள் நடமாடும் இடம், உஷாராக செல்லும்படி எழுதப்பட்டிருக்கும். இதை வைத்து பொதுமக்கள் முன்னெச்சரிகையுடன் செயல்படலாம். அதேபோல யானைகளுக்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலரை வைத்து, அதன் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து, யானைகள் நடமாட்டம் பற்றி கிராம மக்களுக்கு முன்கூட்டியே வனத்துைறயினர் எச்சரிக்கை விடுவார்கள். இதன் மூலம் பொதுமக்கள் உஷாராக இருந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story