மரத்தில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன காவலாளி சாவு


மரத்தில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன காவலாளி சாவு
x

ஆடுகளுக்கு இலைதழைகள் பறித்தபோது மரத்தில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்தார்.

மைசூரு;


மைசூரு (மாவட்டம்) தாலுகா பளவாடி கிராமத்தை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 41). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் சொந்தமாக ஆடுகள் வளர்ந்து வந்தார்.

இந்த நிலையில் அனில்குமார், ஆடுகளுக்கு இரைக்கு தேவையான இலைதழைகளை பறிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள மரத்தில் ஏறியுள்ளார். அப்போது இலைகளை பறித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி மரத்தில் இருந்து அனில்குமார் கீேழ விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அனில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மைசூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், அனில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.


Next Story