தேர்தலில் போட்டியிட திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி 86 ரவுடிகளின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை


தேர்தலில் போட்டியிட திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி  86 ரவுடிகளின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
x

பெங்களூருவில் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 86 ரவுடிகளின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 28 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு: பெங்களூருவில் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 86 ரவுடிகளின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 28 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தலில் போட்டியிட திட்டம்

பெங்களூரு மாநகராட்சிக்கு எந்த நேரமும் தேர்தல் நடைபெறாமலம் என்பதாலும், சட்டசபை தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ளதாலும், இந்த தேர்தல்களில் போட்டியிட்டு சில ரவுடிகள் அரசியல் ரீதியாக தங்களை வளர்த்து கொள்ள திட்டமிட்டு வருவது பற்றியும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், ரவுடிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர்களது வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

ரவுடிகளின் வீடுகளில் சோதனை

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் யத்தீஷ் சந்திரா தலைமையில் நகரில் 86 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டார்கள்.

இந்த சோதனையின் போது முக்கியமான ரவுடிகளான சைக்கிள் ரவி, வில்சன் கார்டன் நாகா, பேக்கரி ரவுடி உள்ளிட்டோர் தங்களது வீடுகளில் இருக்கவில்லை. அவர்களது குடும்பத்தினரிடம், ரவுடிகள் பற்றிய தகவல்களையும், விசாரணைக்கு ஆஜராகும்படியும் போலீசார் உத்தரவிட்டு சென்றிருந்தார்கள்.

28 பேரிடம் விசாரணை

மேலும் சில ரவுடிகளின் வீடுகளில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றார்கள். பின்னர் 28 ரவுடிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கு வைத்து குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்களா? மக்களின் அமைதியை கெடுக்கும் விதமாக ஏதேனும் திட்டம் தீட்டினார்களா? உள்ளிட்டவை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரிடம் சிக்கிய 28 ரவுடிகளிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சில ரவுடிகளிடம் விசாரித்து விட்டு, குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.


Next Story