ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்
ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் ராஜோரி அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிசண்டையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதலின் போது சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லக்ஷ்மணன் டி ஆகியோர் உயிரிழந்தனர். வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகளும் இறந்தனர்.
Related Tags :
Next Story