இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்தி உருவம் கொண்ட தொண்டர்

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி உருவம் கொண்ட தொண்டர் ஒருவர் பங்கேற்றுள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்தி உருவம் கொண்ட தொண்டர்
Published on

மீரட்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை டெல்லியின் லோனி பகுதி வழியே உத்தர பிரதேசத்தில் அவரது யாத்திரை நுழைந்தது.

அதன்பின்பு, அவரது யாத்திரை நேற்று மாவிகலா பகுதியில் இருந்து பராத் பகுதிக்கு சென்றது. தொடர்ந்து பாக்தத் பகுதியை கடந்து சென்றது. இந்த யாத்திரையில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் கலந்து கொண்டார்.

இதேபோன்று, ராகுல் காந்தியின் உருவம் கொண்ட கட்சி தொண்டர் ஒருவரும் இந்த யாத்திரையில் பங்கேற்றார். 3 நாட்கள் யாத்திரைக்கு பின்னர், நாளை (ஜனவரி 6) மீண்டும் அரியானாவுக்குள் யாத்திரை நுழைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com