மேற்கு வங்காளத்தில் இருந்து மாயமானவர்: கணவருடன் வீடியோ காலில் பேசியபடி இளம்பெண் தற்கொலை
கணவருடன் வீடியோ காலில் பேசியபடி இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் தபாஸ் கோஷ்(வயது 36). இவரது மனைவி முன்முன் கோஷ்(30). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முன்முன் தனது மகனுடன் திடீரென மாயமானார். இந்த நிலையில் தபாசின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய முன்முன் தனது பெற்றோரை சந்திக்க வந்து இருப்பதாக கூறினார். ஆனால் அதன்பின்னர் முன்முன்னை, தபாசால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தபாசிடம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு முன்முன் பேசிய முன்முன், அவரிடம் பேசியபடியே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக பெங்களூரு கனகபுரா ரோடு ககலிபுராவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், அங்கு வந்து மகனை அழைத்து செல்லும்படியும் முன்முன் கூறினார். இதுபற்றி ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.