மக்களின் புதிய நம்பிக்கையாக ஆம் ஆத்மி கட்சி மாறியுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்


மக்களின் புதிய நம்பிக்கையாக ஆம் ஆத்மி கட்சி மாறியுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்
x

இந்திய அரசியலில் பல வரலாறுகளை ஆம் ஆத்மி கட்சி படைத்துள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டதன் 10 வது ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டரில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:- 10 ஆண்டுக்ளுக்கு முன்பாக இதே நாளில் ஆம் ஆத்மி கட்சி நிறுவப்பட்டது.

இந்த 10 ஆண்டுகளில் மக்களின் அபரிமிதமான அன்பு மற்றும் கட்சியினரின் உழைப்பு ஆகியவற்றால் இந்திய அரசியலில் பல வரலாறுகளை ஆம் ஆத்மி கட்சி படைத்துள்ளது. நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையாக ஆம் ஆத்மி மாறியுள்ளது. நாங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள்" என்றார்.


Next Story