காங்கிரஸ் தான் எதிர்க்கட்சி, ஆம் ஆத்மிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது - அமித்ஷா பேச்சு


காங்கிரஸ் தான் எதிர்க்கட்சி, ஆம் ஆத்மிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது - அமித்ஷா பேச்சு
x

குஜராத் தேர்தலில் வெற்றிபெற்றோர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளகளின் பெயர் இடம்பெறாது என்று அமித்ஷா தெரிவித்தார்.

காந்திநகர்,

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு 1 ( நாளை) மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று பிடிஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, குஜராத் மக்கள் மனதில் ஆம் ஆத்மி இல்லை. தேர்தல் முடிவு வரை காத்திருங்கள்... தேர்தலில் வெற்றிபெற்றோர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளகளின் பெயர் இடம்பெறாது என நினைக்கிறேன். குஜராத்தில் காங்கிரஸ் தான் முக்கிய எதிர்க்கட்சி. ஆனால், குஜராத்திலும் காங்கிரஸ் கடந்து வரும் நெருக்கடியை பார்க்க முடியும்' என்றார்.


Next Story