திருமணம் ஆகாததை காரணம் காட்டி கருக்கலைப்பை மறுக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு


திருமணம் ஆகாததை காரணம் காட்டி கருக்கலைப்பை மறுக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
x

திருமணம் ஆகாததை காரணம் காட்டி கருக்கலைப்பை மறுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்ததால் கர்ப்பமானார். அவர் தனது 20 வார கருவை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், 'கருக்கலைப்பு சட்டத்தின் 3-வது பிரிவில் 'பார்ட்னர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர கணவர் என்று குறிப்பிடப்படவில்லை. இதன் பொருள் திருமணமாகாத பெண்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். எனவே மனுதாரர் திருமணம் ஆகாததை காரணம் காட்டி கருக்கலைப்பை மறுக்க முடியாது.

மனுதாரரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குழுவின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது' என தெரிவித்தனர்.

1 More update

Next Story