அம்மா நான் அழகாக இருக்கேனா...? அவர் கூறியது என்ன..? ருசிகர அனுபவத்தை பகிர்ந்த ராகுல்காந்தி...!


அம்மா நான் அழகாக இருக்கேனா...? அவர் கூறியது என்ன..? ருசிகர அனுபவத்தை பகிர்ந்த ராகுல்காந்தி...!
x

நான் சிறுவனாக இருக்கும் போது, என் அம்மாவிடம் சென்று அழகாக இருக்கிறேனா? என்று கேட்டால், அவர் ரொம்ப சுமாராக இருக்கிறாய் என்று பதிலளிப்பார் என தனது ருசிகர அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை கடந்து கடந்த 7-ந் தேதி மராட்டியம் வந்தது. மராட்டிய எல்லையில் உள்ள தெக்லூரில் அன்றைய தினம் இரவு காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மராட்டியத்தில் கடந்த 14 நாட்களாக நடந்த ராகுல் காந்தியின் 380 கி.மீ. நடைபயணம் முடிவுக்கு வந்தது.

இதனிடையே ராகுல்காந்தி குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்கு 2 நாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வருகிற 23-ந்தேதி (நாளை மறுநாள்) மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூரில் மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார்.

இந்தநிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ராகுல்காந்தி தனது சிறு வயது அனுபத்தை பகிர்ந்துள்ளார்.

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பேட்டியளித்தவர் கூறியதைக் கேட்ட ராகுல்,

"நான் சிறுவனாக இருக்கும் போது, என் தாயிடம் சென்று கேட்பேன்,அம்மா நான் மிகவும் அழகாக இருக்கிறேனா? என்று, அதற்கு உடனே என் அம்மா என்னை திரும்பிப் பார்த்துவிட்டு, இல்லை. நீ மிகவும் சுமார் தான் என நகைச்சுவையாய் கூறுவார்.

மேலும் அவர் கூறுகையில், என் தந்தையும் அப்படித்தான். அவ்வளவு ஏன், என் ஒட்டுமொத்த குடும்பமும் அப்படித்தான். ஏதாவது நாம் ஒன்றைச் சொன்னால், உடனடியாக அவர்கள் நம்மை எங்கே வைக்க வேண்டுமோ, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே அனுப்பிவிடுவார்கள். அதனால்தான் அவர், நீ மிகவும் சுமாராக இருக்கிறாய் என்று சொல்லுவார்.

அது என் நினைவில் எப்போதுமே ஒட்டிக்கொண்டது என்றார். தனது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி,

தனக்குத் தேவையான காலணிகளை நானே சென்று வாங்கிக் கொள்வேன். ஆனால் சில நேரங்களில் எனது தாயும், சகோதரியும் கூட வாங்கித் தருவார்கள். சில அரசியல் நண்பர்களும் கூட எனக்கு காலணிகளை பரிசளிப்பார்கள் என்று கூறிய ராகுலிடம், பாஜகவைச் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் காலணி வாங்கிக் கொடுத்திருக்கிறார்களா என்று கேட்டதற்கு, இல்லை அவர்கள் என் மீது காலணிகளை வீசத்தான் செய்வார்கள் என்று சிரித்தபடி பதில் அளித்தார் அதனை திருப்பி வீசியிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, எப்போதுமே அது போன்ற செயலில் ஈடுபட்டது இல்லை என்று ராகுல்காந்தி பதிலளித்தார்.


Next Story