5 வயது சிறுமியை லிப்டில் பாலியல் வன்கொடுமை செய்த ஏசி மெக்கானிக்


5 வயது சிறுமியை லிப்டில் பாலியல் வன்கொடுமை செய்த ஏசி மெக்கானிக்
x

ஏசி மெக்கானிக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏசியை பழுது பார்க்க வந்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பை மாவட்டம் தலொஜா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏசி பழுதடைந்திருந்ததால் அதை சரிசெய்ய 19 வயதான ஏசி மெக்கானிக் வந்திருந்தார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பழுதான ஏசி-யை மெக்கானிக் பழுது செய்துகொண்டிருந்தபோது அந்த குடியிருப்பு பகுதியில் 5 வயது சிறுமி தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது, தனியாக விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை ஏசி மெக்கானிக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த லிப்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி 3-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமிக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் கேட்டுள்ளார். அப்போது, தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் வேகமாக தரைத்தளத்திற்கு ஓடிவந்தார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஏசி மெக்கானிக் வேகமாக குடியிருப்பை விட்டு வெளியேற முயற்சித்தார். உடனடியாக, குடியிருப்பு காவலாளியின் உதவியுடன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஏசி மெக்கானிக்கை அந்த பெண் பிடித்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஏசி மெக்கானிக்கை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது.


Next Story