2 கார்கள் மோதல்: அண்ணன்-தங்கை சாவு


2 கார்கள் மோதல்: அண்ணன்-தங்கை சாவு
x

பெலகாவி அருகே 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர்.

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா கப்பலகுடி கிராமத்தை சேர்ந்தவர் துண்டப்பா அடிவப்பா படிகேரா(வயது 34). இவரது தங்கை பாக்யஸ்ரீ நவீனா கம்பாரா(22). இவர்கள் 2 பேரும் நேற்று காரில் தார்வாரில் இருந்து கப்பலகுடி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். பெலகாவி மாவட்டம் முதலகி தாலுகா குர்லாபுரா அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது லோகபுராவில் இருந்து புனே நோக்கி ஒரு கார் சென்றது. இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக 2 கார்களும் நேருக்கு மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 கார்களும் முற்றிலும் சேதம் அடைந்தன. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி துண்டப்பா, பாக்யஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இன்னொரு காரில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் பெயர்கள் தெரியவில்லை. விபத்து குறித்து முதலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story