காங்கிரசின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியானது


காங்கிரசின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியானது
x
தினத்தந்தி 14 Dec 2022 3:01 AM IST (Updated: 14 Dec 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் பெயர்களுடன் காங்கிரசின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாசன்:-

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் இப்போதே தீவிர பிரசாரம் செய்ய தொடங்கி விட்டன. பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்கள்.

மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இதனால் கர்நாடகத்தில் இப்போதே தேர்தல் ஜுரம் தொற்றி கொண்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

இந்த நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த வேட்பாளர் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், அந்த உத்தேச பட்டியலில் தற்போதைய அரிசிகெரே தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிஎம்.எல்.ஏ.வின் பெயரும் இடம்பிடித்துள்ளது.

அதாவது, சரவணபெலகோலா தொகுதியில் லலித் ராகவ், அரிசிகெரே தொகுதியில் சிவலிங்கேகவுடா, பேளூர் தொகுதியில் சிவராம், ஹாசன் தொகுதியில் ரங்கசாமி, ஒலேநரசிப்புரா தொகுதியில் ஸ்ரேயாஸ் பட்டீல், அரிசிகெரே தொகுதியில் ஏ.மஞ்சு, சக்லேஷ்புரா தொகுதியில் முரளி மோகன் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

காங்கிரசில்...

இவர்களில் சிவலிங்கேகவுடா தான் தற்போது அரிசிகெரே தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதனால் அவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர உள்ளது உறுதியாகி உள்ளது. இது ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story