இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 734 பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 734 பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 734 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,66,377 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,307- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,23,539- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 531 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் இதுவரை 219.80 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்டது.


Next Story