இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,132- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,132 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மேலும் 1,132- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 14,839- ஆக குறைந்துள்ளது. கொரொனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
அதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது. மொத்த மாதிப்புடன் ஒப்பிடும் போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை விகிதம் 0.03 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.78 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை 219.72 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story