இந்தியாவில் கொரோனா பாதிப்பு; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது
x
தினத்தந்தி 16 Nov 2022 10:22 AM IST (Updated: 16 Nov 2022 10:35 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,561-ஆக குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 501 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,561 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.79 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.82 கோடி டோஸ்கள் ஆகும்.


Next Story