நடிகர் பிருத்விராஜ் வீட்டில் திடீர் ரெய்டு - ஆவணங்களை அள்ளிச்சென்ற அதிகாரிகள்


நடிகர் பிருத்விராஜ் வீட்டில் திடீர் ரெய்டு - ஆவணங்களை அள்ளிச்சென்ற அதிகாரிகள்
x

அதிகாரிகள், சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோழிக்கோடு,

கேரளாவில் நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை நடத்தினர். இந்த வருமான வரி சோதனை குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சோதனை தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் மறுத்து விட்ட நிலையில், சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story