நடிகையின் நாயை, கோவில் முன்பு விட்டு சென்ற திருட்டு ஆசாமி


நடிகையின் நாயை, கோவில் முன்பு   விட்டு சென்ற திருட்டு ஆசாமி
x

நடிகையின் நாயை, கோவில் முன்பு திருட்டு ஆசாமி விட்டு சென்றுள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு நாகரபாவி டெலிகாம் லே-அவுட்டில் வசித்து வரும் சின்னத்திரை நடிகையான நிருஷா, டிம்பிள் என்ற 8 வயது பெண் நாயை வளர்த்து வருகிறார். அந்த நாயை ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் திருடி சென்று இருந்தனர். இந்த நிலையில் திருடிய நாயை திரும்ப தந்து விடும்படி நிருஷா கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று நிருஷாவின் வீட்டின் அருகே உள்ள கோவில் முன்பு திருடப்பட்ட நாயை மர்மநபர் ஒருவர் விட்டார். பின்னர் நிருஷாவின் தாய்க்கு செல்போனில் தொடர்பு கொண்டு நாயை, கோவில் முன்பு விட்டு சென்று இருப்பதாக கூறினார். இதையடுத்து நிருஷாவும், அவரது தாயும் சென்று நாயை வீட்டிற்கு தூக்கி சென்றனர். தனது நாய் கிடைத்தது குறித்து நிருஷா வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்து உள்ளார்.


Next Story