போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்க வாலிபர் கைது


போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்க வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்க வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:-

பெங்களூருவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து வேலை, மருத்துவம், படிப்பு விசாவில் பெங்களூருவுக்கு வந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றியவரை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்த அந்தோணி என்பதும், வேலை தொடர்பான விசாவில் பெங்களூருவுக்கு வந்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. இவர் கோவாவில் இருந்து போதைப்பொருட்களை வாங்கிவந்து பெங்களூருவில் அதிக விலைக்கு விற்று வந்ததும், அந்த பணத்தில் விருந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 250 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.


Next Story