டெல்லியில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி இன்று காலி செய்ய உள்ளதாக தகவல்


டெல்லியில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி இன்று காலி செய்ய உள்ளதாக தகவல்
x

டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

புதுடெல்லி,

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி காலி செய்தார்.

இதையடுத்து, அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ராகுல் காந்தி இன்று அரசு பங்களாவை மக்களவைச் செயலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story