கே.பி.எஸ்.சி.க்கு எதிராக தேர்வு எழுதியவர்கள் போராட்டம்


கே.பி.எஸ்.சி.க்கு எதிராக   தேர்வு எழுதியவர்கள் போராட்டம்
x

கே.பி.எஸ்.சி.க்கு எதிராக தேர்வு எழுதியவர்கள் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு: கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு பணிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிட்ட கோரி கே.பி.எஸ்.சி. அலுவலகம் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தி இருந்தார். ஆனாலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி கே.பி.எஸ்.சி.க்கு எதிராக சுதந்திர பூங்காவில் தேர்வு எழுதியவர்கள் போராட்டம் நடத்தினர் இதுபோல் விஜயநகரிலும் கே.பி.எஸ்.சி.க்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரை விஜயநகர் போலீசார் கைது செய்தனர்.


Next Story