அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் பரபர வாதம்


தினத்தந்தி 5 Jan 2023 3:02 PM IST (Updated: 5 Jan 2023 3:12 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணையில் 2-வது நாளாக இன்றும் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு (நேற்று) தள்ளிவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நேற்று முன் வைக்கப்பட்ட நிலையில் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.




Next Story