அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு

அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு
Published on

புதுடெல்லி,

அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கில், டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், விதிகள் மாற்றத்தை அங்கீகரித்தது, எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில்தான், அவரை நாங்கள் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளோம் என தேர்தல் ஆணையம் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com