பஞ்சாபில் ஏகே 47 துப்பாக்கிகள், தோட்டாக்களை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர்


பஞ்சாபில் ஏகே 47 துப்பாக்கிகள், தோட்டாக்களை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர்
x

பாதுகாப்புப் படையினரால் இரண்டு ஏகே 47 தாக்குதல் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இன்று எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இரண்டு ஏகே 47 தாக்குதல் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சண்டி வாலா கிராமத்தில் இருந்து நண்பகல் 12 மணியளவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதிதாக தோண்டப்பட்டிருந்த மண்ணை அவர்கள் கவனித்தனர்.

அப்போது அதில் இருந்து இரண்டு ஏகே47 துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 40 தோட்டாக்கள் அடங்கிய ஒரு பையை அவர்கள் கண்டுபிடித்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story