2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - அகிலேஷ் யாதவ் அறிவிப்பு


2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
x

கோப்புப்படம்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

லக்னோ,

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அசம்கார் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்த ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், அகிலேஷ் யாதவ் நேற்று கனோஜ் தொகுதிக்கு சென்றார். அங்கு அளித்த பேட்டியில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கனோஜ் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அங்குதான் அவர் முதல்முறையாக தேர்தலில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதுகுறித்து கட்சி முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.


Next Story