தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துங்கள்; தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை


தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துங்கள்;  தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
x

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தும்படி தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஒடிசா, தமிழகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தகுதியுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அதனுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன்,ழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story