'அமித்ஷா ஒரு அரசியல் வியாபாரி' - சித்தராமையா கடும் விமர்சனம்


அமித்ஷா ஒரு அரசியல் வியாபாரி - சித்தராமையா கடும் விமர்சனம்
x

கர்நாடக மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடாக மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்தியும், எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான பதிவுகளில் பா.ஜ.க. குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் முதல்-மந்திரி பதவியை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வைத்த அமித்ஷா, காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது வேடிக்கையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் பா.ஜ.க. உருவானதில் இருந்தே விதான சவுதா ஊழல் குடியிருப்பாக மாறிவிட்டது என்றும், இதில் அமித்ஷாவின் பங்கு என்ன என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கர்நாடக மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், விவசாயிகளுக்கான மழை, வெள்ள நிவாரணத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடக மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, அவர் பேசிய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே சமயம் சித்தராமையாவின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಹುದ್ದೆಯನ್ನೇ 2000 ಕೋಟಿ ರೂಪಾಯಿಗೆ ಮಾರಾಟಕ್ಕೆ ಇಟ್ಟಿರುವ ರಾಜಕೀಯ ವ್ಯಾಪಾರಿ ಗೃಹಸಚಿವ @AmitShah ಅವರು ಕಾಂಗ್ರೆಸ್ ಪಕ್ಷದ ವಿರುದ್ಧ ಭ್ರಷ್ಟಾಚಾರದ ಆರೋಪ ಮಾಡುತ್ತಿರುವುದು ತಮಾಷೆಯಾಗಿದೆ.
1/6

— Siddaramaiah (@siddaramaiah) December 30, 2022 ">Also Read:


Next Story