ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் கத்ராவில் இருந்து கிழக்கே 61 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது புவிமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.
முன்னதாக நேற்று அதிகாலை 2 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





