ஆந்திரா: ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர தீ விபத்து

பயணிகள் அனைவரும் இறங்கியதால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆந்திரா: ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர தீ விபத்து
Published on

விசாகப்பட்டினம்,

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா நகரில் இருந்து ஆந்திர மாநில திருமலைக்கு திருமலை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

அப்போது ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் 3 ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பி6, பி7, எம்1 ஆகிய 3 பெட்டிகளில் மளமளவெனப் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அணைத்தனர். பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தீப்பிடித்ததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com