மனைவியைத் தேடி வந்த போது இல்லாததால் கோபத்தில் மாமியாரைக் கொன்ற நபர்..!


மனைவியைத் தேடி வந்த போது இல்லாததால் கோபத்தில் மாமியாரைக் கொன்ற நபர்..!
x

கோப்புப்படம்

மனைவியைத் தேடி வந்த போது மனைவி இல்லாததால் கோபத்தில் மாமியாரை, மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காக்கிநாடா,

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி திவ்யா. கணவருக்கு தன் மீது சந்தேகம் இருப்பதாக உணர்ந்த திவ்யா 5 மாதங்களுக்கு முன்பு ரமேஷைப் பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ரமேஷ், திவ்யாவைப் பார்ப்பதற்காக அவரது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். திவ்யா படிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளார். திவ்யா வீட்டில் இல்லாததை அறிந்த ரமேஷ் கோபத்தில் அவரது மாமியார் வெங்கடரமணம்மாவிடம் தகராறு செய்துள்ளார்.

தொடர்ந்து கோபத்தில் மாமியாரை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து வெங்கடரமணம்மா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பிதாபுரம் டவுண் போலீசார் தலைமறைவாகியுள்ள ரமேஷை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெங்கடரமணம்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Next Story