திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்துக்கான (செப்டம்பர்) அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

ஆனால் செப்டம்பர் மாதம் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com