காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
x

காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டம் பிஜ்பெகரா பகுதியில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

நேற்று காலையில் பிஜ்பெகரா அருகே செகி டியூடூ பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் என்று சந்தேகப்பட்ட பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி படுகாயம் அடைந்தான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இறந்த பயங்கரவாதி, தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான சஜாத் அகமத் தந்த்ரே என்று தெரியவந்தது. இவன் லஸ்கர்-இ-தொய்பா இயக்க கூட்டாளி ஆவான். பல்வேறு வழக்குகள் அவன் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story