டி.ஆர்.டி.ஓ.வின் தலைவராக சமீர் வி காமத் நியமனம்


டி.ஆர்.டி.ஓ.வின் தலைவராக சமீர் வி காமத் நியமனம்
x

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவராக சமீர் வி காமத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.



புதுடெல்லி,



மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் செயலாளர் மற்றும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவராக சதீஷ் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக சதீஷ் ரெட்டியை மத்திய அரசு நியமித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக சமீர் வி காமத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அந்த துறையின் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த அமைப்பில் விஞ்ஞானியாக உள்ள காமத், 1985-ம் ஆண்டு, ஐ.ஐ.டி. காரக்பூரில் உலோகவியல் பொறியியல் படிப்பில் பி.டெக் படித்து உள்ளார்.

1988-ம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாநில பல்கலை கழகத்தில் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். காமத், 1989-ம் ஆண்டு விஞ்ஞானியாக ஐதராபாத்தில், டி.ஆர்.டி.ஓ. அமைப்பில் இணைந்து பணியாற்றினார்.

அதன்பின், அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறி, 2015-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆய்வக இயக்குனர் பதவியை ஏற்றார். கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி டி.ஆர்.டி.ஓ.வின் நேவல் சிஸ்டம்ஸ் மற்றும் மெட்டீரியல்சின் இயக்குனர் ஜெனரலாக பொறுப்பேற்றார். இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவர் மற்றும் துறையின் செயலாளர் பொறுப்புக்கு அவர் உயர்ந்து உள்ளார்.

1 More update

Related Tags :
Next Story