திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.
மேலும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story