துப்பாக்கி முனையில் விவசாயி வீட்டிலிருந்து தங்கம், வெள்ளி, ரூ.8.5 லட்சம் ரொக்கம் கொள்ளை..!


துப்பாக்கி முனையில் விவசாயி வீட்டிலிருந்து தங்கம், வெள்ளி, ரூ.8.5 லட்சம் ரொக்கம் கொள்ளை..!
x

மராட்டியத்தில் உள்ள விவசாயி வீட்டில் துப்பாக்கி முனையில் தங்கம், வெள்ளி மற்றும் ரூ.8.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டோரி தாலுகாவில் உள்ள மனோரி ஷிவரில் நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விவசாயிக்கு சொந்தமான பங்களாவிற்குள் நுழைந்த ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பல், வீட்டில் இருந்தவர்களை கத்திகள் மற்றும் கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த 280 கிராம் தங்கம், 480 கிராம் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.8.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, திண்டோரி போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story