ஹாவேரியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த 2,538 பேர் பங்கேற்பு


ஹாவேரியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த 2,538 பேர் பங்கேற்பு
x

ஹாவேரியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த 2,538 பேர் பங்கேற்பு உள்ளனர்.

உப்பள்ளி;

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் டவுன் பகுதியில் உள்ள ஒசமனி சித்தப்பா மாவட்ட மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 1-ந் தேதி தொடங்கிய இந்த முகாம் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களை சேர்ந்த 1,857 தேர்வர்கள் மைதானத்திற்கு வந்த நிலையில், 1,252 தேர்வர்கள் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த 2,538 பேர் பங்கேற்றனர். கர்நாடகத்தில் 11 மாவட்டங்களை சோ்ந்த 58,218 பேர் இந்த அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தேர்வர்களுக்கு ஹாவேரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் ஆகியவற்றில் தங்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story