மக்களின் உரிமைகளை பறித்த அரசியலமைப்பு சட்டம் 35ஏ: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து


மக்களின் உரிமைகளை பறித்த அரசியலமைப்பு சட்டம் 35ஏ: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து
x

அரசியலமைப்பு சட்டம் 35 ஏ பிரிவை ரத்து செய்த பிறகு ஜம்மு-காஷ்மீரில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியலமைப்பின் 35 ஏ சட்டப்பிரிவானது, ஜம்மு காஷ்மீரில் வசிக்காத மக்களுக்கான சில முக்கிய அரசியலமைப்பு உரிமைகளை பறித்துள்ளது என்றார்.

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை அளித்த அரசியலமைப்பு சட்டம் 35 ஏ பிரிவு, அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை, அசையா சொத்துக்களை வாங்கும் உரிமை, இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரிமை ஆகிய 3 அடிப்படை உரிமைகளை நடைமுறையில் பறித்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

அரசியலமைப்பு சட்டம் 35 ஏ பிரிவை ரத்து செய்த பிறகு ஜம்மு-காஷ்மீரில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இதுவரை 16 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இந்த வழக்கின் 12-வது நாள் விசாரணை இன்று நடைபெறுகிறது.

அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவுடன் 35ஏ சட்டப்பிரிவும் 2019ல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story