வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்த மாணவ-மாணவிகள்.. வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்


வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்த மாணவ-மாணவிகள்.. வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்
x

வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டி அணைத்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கவுகாத்தி

அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் உள்ள சில்சார் அருகே ராமானுஜ் குப்தா கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு 11ஆம் வகுப்பில் படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக தொட்டுப் பேசிக்கொண்டும் இருக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்தின் பார்வைக்கு கடந்த புதன் கிழமை வந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு மாணவியர், மூன்று மாணவர்கள் என மொத்தம் ஏழு பேரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

மேலும், தங்களின் செயல் குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கும் பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கல்வி நிறுவனத்தின் முதல்வர் பூர்ணதீப் சந்தா கூறுகையில்,

இந்த சம்பவமானது மத்திய உணவு இடைவெளியின் போது அரங்கேறியுள்ளது. இந்த நேரத்தில் ஆசியர்கள் யாரும் வகுப்பறையில் இருப்பது இல்லை. வகுப்பறைகளில் நாங்கள் சிசிடிவி வைத்துள்ளோம். அதேபோல் வளாகத்திற்குள் செல்போன்களுக்கு அனுமதியில்லை. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் புதிதாக இங்கு சேர்ந்த மாணவர்களே. இவர்களின் சேர்க்கை 15 நாள்களுக்கு முன்னர் தான் நடைபெற்றது என்றார்.

சஸ்பெண்டான மாணவ மாணவியர்களின் பெற்றோர் அல்லது கார்டியன்களை பள்ளிக்கு வந்து விளக்கம் தர நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story