அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு - 7.2 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு - 7.2 லட்சம் பேர் பாதிப்பு
Published on

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலமான அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாமல் கொட்டி வரும் கனமழையால் அங்குள்ள 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கனமழை, வெள்ளத்தால் அந்த 22 மாவட்டங்களை சேர்ந்த 7.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நாகோன் மாவட்டம் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளது. அங்கு சுமார் 3.46 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 2.29 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 58,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் அங்கு கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com