இதுதான் உண்மை காதலா..? எய்ட்ஸ் நோயாளி காதலனின் ரத்தத்தை தனது உடம்பில் செலுத்திய 15 வயது சிறுமி!


இதுதான் உண்மை காதலா..? எய்ட்ஸ் நோயாளி காதலனின் ரத்தத்தை தனது உடம்பில் செலுத்திய 15 வயது சிறுமி!
x

எய்ட்ஸ் நோய் பாதித்த காதலனின் ரத்தத்தைத் தனது உடம்பில் செலுத்திக்கொண்டுள்ளார் பள்ளி மாணவி ஒருவர்.

கவுகாத்தி,

எய்ட்ஸ் நோய் பாதித்த காதலனின் ரத்தத்தைத் தனது உடம்பில் காதலி செலுத்திக்கொண்டு, இதுதான் உண்மை காதல் என்று நிரூபித்து உள்ளார் டீன் ஏஜ் பருவ பள்ளி மாணவி ஒருவர்.

அசாம் மாநிலத்தில் சூல்குச்சி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், முகநூல் மூலம் இளைஞன் ஒருவரிடம் பழகி காதலித்துள்ளார். சிறுமியும் அந்த இளைஞனும் கடந்த மூன்று வருடங்களாகக் காதலிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இளைஞன் மீது இருந்த காதலில், பல முறை வீட்டை விட்டு அந்த இளைஞனுடன் சென்றுள்ளார். அப்படிச் செல்லும்போது எல்லாம் சிறுமியின் பெற்றோர்கள் திரும்பி அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் காதலனுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்துள்ளது. சிறுமி தனது காதல் உண்மை என்பதை நிரூபிக்க எச்.ஐ.வி பாதிப்பு உள்ள தனது காதலனின் ரத்தத்தை ஊசியின் மூலம் தனது உடம்பில் செலுத்திக் கொண்டுள்ளார்.

அந்த சிறுமியின் செயல் பெற்றோருக்கு தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story