இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது அசாம் மகளிரணி தலைவி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலின அடிப்படையில் துன்புறுத்தி வருகிறார் என அசாம் மகளிரணி தலைவி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது அசாம் மகளிரணி தலைவி பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

கவுகாத்தி,

அசாம் காங்கிரசின் இளைஞரணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது, அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கடந்த காலங்களில் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தும், எனது பாலின அடிப்படையில் வேற்றுமைப்படுத்தியும் வந்துள்ளார். கட்சி தலைமையிடம் பல முறை இந்த விவகாரம் பற்றி கொண்டு வந்தும் அவர்கள் அதனை காது கொடுத்து கேட்கவே இல்லை என ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் எம்.பி. மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை டேக் செய்து டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

4 தலைமுறை காங்கிரஸ்வாதியான நான், கட்சியின் உள்ளமைப்புகளில் 2 முறை போட்டியிட்டு உள்ளேன். பூத் கமிட்டிகளை அமைத்து உள்ளேன். போலீசாரிடம் அடி வாங்கி இருக்கிறேன்.

அரசியல் அறிவியல் முதல் எல்.எல்.பி. வரை டெல்லி பல்கலை கழகத்தில் படித்து உள்ளேன். பி.எச்டி பட்டமும் வாங்கி இருக்கிறேன். கட்சி நலனுக்காக அமைதி காத்தேன். ஆனால், ஸ்ரீனிவாசின் துன்புறுத்தல் நிற்கவில்லை என தெரிவித்து உள்ளார்.

கடந்த 6 மாதங்களாக ஸ்ரீனிவாஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பொறுப்பு வகிக்கும் வர்தன் யாதவ் ஆகியோர் தொடர்ச்சியாக என்னை துன்புறுத்தி வருகின்றனர்.

இதுபற்றி கட்சி தலைமைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித விசாரணை கமிட்டியும் அவர்களுக்கு எதிராக அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

எனினும், கடந்த காலங்களில் இவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை சார்பில், பல கோடி மதிப்பிலான சாரதா சிட்பண்டு ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் இருந்து தப்பிக்க அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வாவை அவர் நேரில் சந்தித்து பேசினார் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com